கடலூர், செப்டம்பர் 23 | புரட்டாசி 07:
போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூரிலும் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
37வது நாளாக தொடரும் இந்த காத்திருப்பு போராட்டத்தில், கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு பன்னிரண்டு தொழிலாளர்கள் மொட்டை அடித்து, பட்டை நாமம் சாத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பந்தல் அமைத்து சமைத்து சாப்பிட்டு போராட்டத்தைத் தொடரும் ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என உறுதியெடுத்தனர்.
இப்போராட்டத்திற்குப் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. பாஸ்கரன் தலைமை தாங்கினார். மேலும் பல போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆதரவு தெரிவித்தனர். போராட்டக்காரர்கள், நிலுவையிலுள்ள ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், ஊழியர்களின் சம்பள நிலுவை தீர்க்கப்பட வேண்டும், வேலைவாய்ப்பில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
.jpg)
No comments:
Post a Comment